இயக்குனர் மீது அஜீத் பட ஹீரோயின் பகீர் குற்றச்சாட்டு!!!

11th of December 2013
சென்னை::நான் நடிக்கும் படத்தில் பிரபல தமிழ் ஹீரோ நடிப்பதாக கூறி இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார் என்றார் இந்திய அழகி பார்வதி ஓமனக்குட்டன். கடந்த 2008ம் ஆண்டு இந்திய அழகியாகவும், அதே ஆண்டில் உலக அழகி போட்டியில் 2வது இடத்தையும் பிடித்தவர் கேரளாவை சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன். இவர் அஜீத்தின் பில்லா 2 படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது இந்தியில் பீட்சா படத்தில் நடித்து வருகிறார்.
 
இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது:
 
மலையாள இயக்குனர் பிஜ்ஜு ஜான்சன் என்பவர் என்னை அணுகி தமிழ், தெலுங்கில் படம் இயக்க உள்ளதாகவும் அதில் நீங்கள் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றார்.
 
மேலும் அப்படத்தில் தமிழ் பட முன்னணி நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று கூறினார். அதைக் கேட்டவுடன் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஷூட்டிங் தொடங்கியபோது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ் பட ஹீரோவுக்கு பதில் பிஜ்ஜுவே ஹீரோவாக நடிப்பதாக கூறினார். இது என்னை கோபத்தில் ஆழ்த்தியதுடன் மனதை காயப்படுத்தியது.
பி
ஜ்ஜுவை பொறுத்தவரை ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. அவரது இயக்கத்தில் நான் நடித்த கே கியூ என்ற படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் பிஜ்ஜு படத்தில் நான் எப்படி நடிப்பது? படத்திலிருந்து விலகுவது பற்றி யோசித்து வருகிறேன்

tamil matrimony_HOME_468x60.gif

Comments