4th of December 2013
சென்னை::தமிழில் மழை படத்தில் என்ட்ரியானவர் ஸ்ரேயா. அதன்பிறகு படிப்படியாக வளர்ந்து வந்தவர் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்தார். அதனால் அந்த ஒரே படத்தில் ஸ்ரேயாவின் மார்க்கெட் எக்குதப்பாக எகிறியது. ஆனபோதும், அதன்பிறகு பெரிய அளவிலான படங்கள் இல்லை. சில படங்களில் நடித்தவர் மார்க்கெட் சறுக்கத் தொடங்கியதும், தெலுங்கு, கன்னடம் என்று சில படங்களில் நடித்தார். பின்னர், கன்னடத்தில் விபச்சாரி வேடத்தில் நடித்த பவித்ரா படம் தன்னை பேச வைக்கும் என்று எதிர்பார்த்த ஸ்ரேயாவுக்கு மறுபடியும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் தற்போது தெலுங்கில் நாகார்ஜூனா நடிக்கும் மனம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, மலையாளத்தில் ஒரு படத்தில் தற்போது கமிட்டாகியிருக்கிறார் ஸ்ரேயா. மோகன்லால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கும் அப்படத்தில் ஸ்ரேயாவுககு ஒரு வெயிட்டான வேடம் கிடைத்துள்ளதாம். ஆனால், கதாநாயகி இல்லையாம். ஒரு மாறுபட்ட கதாபாத்திரமாம். அந்த வேடத்துக்காக 5 கிலோவுக்கு மேல் வெயிட் போட வேண்டும். புடவை கட்டிப்பார்த்தால் ஒரு ஆன்ட்டி லுக் இருக்க வேண்டும் என்று அப்பட டைரக்டர் சொன்னாராம்.
அதனால் இதுவரை வெயிட் போடாத உணவுகளாக எடுத்துக்கொண்டு வந்த ஸ்ரேயா, இப்போது உடம்பில் வெயிட் போடும் அசைவ உணவுகளாக தேடிப்பிடித்து சாப்பிட்டு வருகிறாராம். இருப்பினும், இப்போது ஏற்றும் உடம்பை இந்த படத்திற்கு பிறகு எப்படி இறக்கப்போகிறோம் என்ற கவலையும் ஸ்ரேயாவின் அடிமனதிற்குள் அலைமோதிக்கொண்டிருக்கிறதாம்.

Comments
Post a Comment