சண்முக பாண்டியன் ஜோடியாக நடிக்கப்போகிறாராம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி?!!!

17th of December 2013
சென்னை::சண்முக பாண்டியன் ஜோடியாக நடிக்கப்போகிறாராம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த், தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்த பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
 
இந்நிலையில் விஜயகாந்தின் இளையமகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.சகாப்தம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜையை கடந்த 12ம் திகதி சென்னை சாலிகிராமத்திலுள்ள தனது வீட்டில் விமரிசையாக நடத்தினார் விஜயகாந்த்.அரசியல் தலைகள் நிறைய தெரிந்தாலும், விஜயகாந்த்தின் சமகாலத்து நடிகர்கள் மற்றும் இன்றைய யூத் ஹீரோக்கள் சிலரும் விழாவில் கலந்து கொண்டு சண்முக பாண்டியனை வாழ்த்தினர்
 
இந்த விழாவில் பேசிய விஜயகாந்த், சகாப்தம் படத்தில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாக தெரிவித்தார். ஆனால், யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.அதையடுத்து இப்போது சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக 16 வயதினிலே ஸ்ரீதேவியின் மூத்த மகளை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கோலிவுட்டில் தீயாய் செய்தி பரவிக்கிடக்கிறது.ஆனால், இதுபற்றி சகாப்தம் டீமை விசாரித்தால், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுபற்றி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments