17th of December 2013
சென்னை::விஜய்யுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் ஹனிரோஸ்.
மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தவர்தான் ஹனிரோஸ். தொடர்ந்து தமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை.
இந்நிலையில் மீண்டும் மலையாள திரையுலகிற்கு போன ஹனிரோஸுக்கு ‘த்ரிவேண்ட்ரம் லாட்ஜ்’, ‘ஹோட்டல் கலிஃபோர்னியா’, ‘அஞ்சு சுந்தரிகள்’ என வரிசையாக வெற்றி படங்கள் அமைந்தன. இப்போது அவர் மலையாளத்தில் முக்கியமான நடிகையாகிவிட்டார்.
மலையாளத்தில் இவ்வளவு பிஸியாக இருக்கும் ஹனிரோஸ் விஜய்யின் வெறித்தனமான ரசிகையாம். அதுமட்டுமின்றி, விஜய் படங்கள் என்றால் முதல் நாளே தியேட்டருக்குச் சென்று பார்த்துவிடுவராம். அதோடு அவருக்கு பெரிய ஆசை ஒன்றும் இருக்கிறதாம். அதாவது, விஜய்யுடன் எப்படியாவது ஒரு படத்திலாவது(ஜோடியாகத்தான்) நடித்துவிட வேண்டும் என்கிற ஆசைதான்.
அவருடைய இந்த ஆசை நிறைவேறுமா, இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments
Post a Comment