நடிகை ராதா புகார் மீது வழக்கு: தொழிலதிபர் தலைமறைவு!!!

6th of December 2013
சென்னை::சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா, திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழில்அதிபர் பைசூல் மீது கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், திருமணம் செய்து கொள்வதாக கூறி பைசூல் தன்னுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டு ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார். தன்னிடம் ரூ. 50 லட்சம் பணத்தை பைசூல் மோசடி செய்து விட்டதாகவும் ராதா புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து பைசூல் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது கோர்ட்டில் ஆஜரான ராதா பைசூலுக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பைசூலின் முன்ஜாமீன் மனு தள்ளளுபடியானது. அவர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக பைசூல் தலைமறைவானார். அவரை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உதவி கமிஷனர் ஜெய்சுப்பிரமணியன் தெரிவித்தார். திருவல்லிக்கேணியில் உள்ள வீட்டுக்கு செல்லாமல் பைசூல் எங்கேயோ, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் சென்னையில் பைசூல் பதுங்கி இருப்பதை உறுதி செய்துள்ள போலீசார் அவர் இருக்கும் இடத்தை தேடி அலைகிறார்கள். இதற்காக பைசூலுக்கு நெருக்கமானவர்கள் யார் – யார்? என்ற பட்டியலை தயாரித்துள்ள போலீசார் அதனை வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

எனவே விரைவில் பைசூல் போலீசில் சிக்குவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. பைசூல் மீது புகார் தெரிவித்த நாளில் இருந்து அவர் மீது தினமும் ராதா புதுப்புது குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். இந்நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவரின் துணையுடன் பைசூல் தப்பிக்க முயற்சி செய்வதாக ராதா புதிய குற்றச் சாட்டை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

பைசூல் எங்கு இருக்கிறார் என்பது போலீசுக்கு தெரியும். அவர் தினமும் தி.நகர் பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவருடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அவரும், தி.நகர் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரும் பைசூலை காப்பாற்ற நினைக்கிறார்கள். என்னையும், எனது பணத்தையும் அனுபவித்து விட்டு பைசூல் தப்பிக்க நினைக்கிறார். அவரது குடும்பத்தினர் போலீசில் அளித்த புகாரில் முஸ்லீம் அமைப்பின் பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் நான் புகார் செய்திருப்பதாக கூறுவது அப்பட்டமான பொய்.

பைசூல் மீது நான் ஜமாத்தில் புகார் செய்த பின்னர் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதன் பிறகே பைசூல் மீது போதை பொருள் கடத்தியதாக புகார் செய்துள்ளனர். எனக்கு நியாயம் கிடைக்குமா? என்று தெரியவில்லை. இருப்பினும் எனது உரிமைக்காக தொடர்ந்து பேராடுவேன்.

இவ்வாறு ராதா கூறினார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments