திரை விமர்சனம்>>>>>>கல்யாண சமையல் சாதம்!!!

10th of December 2013
சென்னை::தமிழ் கலாசாரத்தில் முக்கியமான ஒன்று திருமணம். அப்படிப்பட்ட தமிழ் கலாசார (ஐயர் வீட்டு திருமணம்) திருமணத்தைப் பற்றிய கதை தான் 'கல்யாண சமையல் சாதம்'.

பிரசன்னாவுக்கும், லேகா வாஷிங்டனுக்கும் மேட்ரிமோனி சைட் மூலம்  திருமணம் ஏற்பாடு செய்யபடுகிறது. நிச்சயத்திற்குப் பிறகு பிரசன்னாவும், லேகாவும் உறவுகொள்ள முற்படுகிறார்கள். அப்போது பிரசன்னா தடுமாற, அவருக்கு அது வேலை செய்யவில்லையோ என்ற டவுட் வருகிறது. இதை லேகா பெரிதாக  எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், இதை எப்படியாவது திருமணத்திற்குள் சரி செய்துவிட  வேண்டும் என்று பிரசன்னாவுக்கு அன்பு கட்டளை இடுகிறார். பிரசன்னாவும், நண்பர்களின் ஆலூசனைகளை கேட்டு, சிட்டு குருவி லேகியம், ராசி கல் மோதிரம், செக்ஸ் ஆலோசகர், செக்ஸ் மருத்துவர் என்று பலரிடம் முறையிட்டும் பலன் இல்லை.

இறுதியில், திருமணம் நெருங்கும் நேரத்தில், பிரசன்னாவின் அம்மா, லேகாவுக்கு மாமியார் டார்ச்சர் கொடுக்க, அவரோ பிரசன்னாவுக்கு டார்ச்சர் கொடுக்கிறார் இறுதியில், பிரசன்னாவின் பிரச்னை தீர்ந்ததா  இல்லையா என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா.

பிரசன்னா புது மாப்பிள்ளை வேடத்தில் ரொம்பவே எளிமையாக நடித்துள்ளார். லேகா வாஷிங்டனுடன் ரோமண்டிக் பண்ணும் பிரசன்னா, தனது நிலையை எண்ணி வருந்தும் போதும் சரி, அதை சரி செய்யவதற்காக அலையும் காட்சிகளும் சரி  காமெடியாக உள்ளது.

லேகா வாஷிங்டன், முதல் முறையாக தனி நாயகியாக நடித்துள்ளார். அனைத்துமே இருந்தும், ஏதோ இல்லாதது போலவே தோன்றும் அவர், அழும் காட்சிகளில் மொக்கையாக நடிக்கிறார்.

லேகாவை  அசத்துவதற்காக, பிரசன்னா மற்றும் அவர்களுடைய நண்பர்கள் செய்யும் அந்த திருமண ஏற்பாடு, நிலாவில் வடை சுடும் பாட்டி கதையைப் போல ரொம்ப பழமையானதாக, அதே சமையம் நம்ப முடியாமலும் உள்ளது.

படம் முழுவதும் ஒரே இரட்டை அர்த்த வசனங்கள் தான் என்றாலும், அவை ரசிகர்களை ரொம்பவே குஷிப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட தரப்பு ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ள இப்படம், அந்த குறிப்பிட்ட ஒரு சில ரசிகர்களையும், வசனங்கள் மூலம் முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு ஓவர் டொஸ், செக்ஸ் ரொமாண்டிக் படமாக அமைந்துள்ளது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments