என்ன சத்தம் இந்த நேரம்’ சாதனை ‘லிம்கா’ புத்தகத்தில் இடம் பெற்றது!!!

1st of December 2013
சென்னை::ஆரோகணம்’ படத்தைத் தயாரித்த ‘ஏ.வி.ஏ.புரொடக்ஷன்ஸ்’ ஏ.வி.அனூப் மீண்டும் பெரும் பொருட்செலவுடன், ‘அலையன்ஸ் பிக்சர்ஸ்’ புரொடக்ஷன் கிருஷ்ணா பலராமராஜா நிர்வாக தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்’. இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குருரமேஷ்.
 
படத்தின் சிறப்பம்சமே ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் நடித்திருப்பதுதான். இந்த குழந்தைகளின் அப்பாவாக இயக்குனர் ‘ஜெயம் ராஜா ‘நடித்திருக்கிறார்.
 
ஆரம்பத்தில் நடிப்பதற்கு அணுகியபோது நடிக்க விருப்பம் இல்லை என மறுத்து விட்டவர், பின்னர் கதையைக் கேட்டதும் நடிப்பதற்கு சம்மதம் சொன்னார்.
 
கதைப்படி ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்காக 6 மாதங்கள் தேடியதன் பலன் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் சென்னையிலேயே கிடைத்ததுதான்.
 
உலக சினிமா வரலாற்றில் இதுபோன்று ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் ஒரு படத்தில் இணைந்து நடித்ததில்லை. இந்த பெருமைக்காக இந்தப்படம், இந்தியாவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
 
இந்திய சினிமாவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஒரே படம் என்ன சத்தம் இந்த நேரம்தான்’.
நான்கு குழந்தைகளைப் பெற்றவர்கள், தினமும் சந்திக்கிற நிகழ்வுகள்தான் இந்த படத்தின் கதை. அதுவும் ஒரே நாளில் காலையில் தொடங்கி மாலையில் முடிகிற சம்பவங்கள்தான் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படம்.
 
சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் சுமார் 41 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடித்திருக்கிறோம்…!” என்கிறார் இயக்குனர் குருரமேஷ். படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments