சூப்பர் ஸ்டார் ரஜினியின் 64வது பிறந்த நாள்!!!

13th of December 2013
சென்னை::ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் சார்பில் தமிழக முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. .
நடிகர் ரஜினி காந்தின் 64வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 
பிறந்தநாளையொட்டி கடந்த சில தினங்களாக ரஜினி ரசிகர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள், கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் போன்றவற்றிற்கு தமிழக முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது
நேற்று சென்னையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் சூளைமேடு ஆஷா நிவாஸ் காப்பகத்தில் சிறுவர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன. 
 
சைதாப்பேட்டை சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. 64 பேருக்கு வேட்டி, 64 பேருக்கு புடவை, 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. சைதை ஜி.ரவி, சைதை ஆர்.முருகன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
 
நேற்று முன்தினம்  இரவு 7 மணிக்கு வடபழனி முருகன் கோவிலில் தங்கதேர் இழுக்கப்படுகிறது. பக்தர் களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில் நேற்றும் ரஜினி ரசிகர் சார்பில் தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 500 பேருக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.
 
தி.நகர் ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் சார்பில்  அதன் நிர்வாகிகள் சீனு,     ராமதாஸ், சூர்யா, ரவி  ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து இந்த கொண்டாட்டம் நடந்து வரும் வேளையில் நேற்று ரஜினி பெங்கள?ர் புறப்பட்டு சென்றார். அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடுவார் என தெரிகிறது.
 
மேலும், இன்று ரஜினி பிறந்த நாளையொட்டி கோச்சடையான் இசைவெளியீடுவதாக இருந்தது. ஆனால், பட வேலை முடிவடையாததால் தள்ளி வைத்துள்ளனர்.  இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் பாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோச்சடையான் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
 
நேற்று 64வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் ரஜினியின் நிஜப்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். தந்தை ரானோஜி ராவ் கெய்க்வாட், தாயார் ரமண்பாய். பிறந்த நாள் 12.12. 1950. பெங்களூரில் அரசு போக்குவரத்தில் கண்டக்டராக பணியாற்றினார். பின்னர் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார். டைரக்டர் கே.பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்‘ படத்தில் நடிகராக அறிமுகமானார். மனைவி லதா. மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா.

ஆன்மிக பயணம்:

ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர் ரஜினி. நிறைய ஆன்மிக புத்தகங்கள் படித்திருப்பதுடன் யோகா, தியானம் கற்றவர். 1996ம் ஆண்டு முதல் ரஜினியின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அவர் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் அவர் இமயமலையில் தங்கி தியானம் மேற்கொள்வது வழக்கம். அத்துடன் பாபாஜி குகைக்கு சென்று தியானத்தில் ஈடுபடுவார். ராகவேந்திரர் பக்தராக இருந்தபோதும் ராமகிருஷ்ண பரமஹம்சா, சுவாமி சச்சிதானந்தா, மகாஅவதார் பாபாஜி, ரமண மகரிஷி போன்ற ஆன்மிகவாதிகளின் பக்தராகவும் இருந்து வருகிறார். ஷூட்டிங் இல்லாத நாட்களிலும் இமயமலை சென்று அங்குள்ள ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.


*     ‘அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினி பேசிய முதல் வசனம் ‘பைரவி வீடு இதுதானே என்பதுதான். நடித்த காட்சிகள் 6.

*     ரஜினி சிகரெட் ஸ்டைல் அறிமுகமான படம் ‘மூன்று முடிச்சு. இந்த பட படப்பிடிப்பு காலத்தில் அவர் பிடித்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை (ஆன் ஸ்கிரின், ஆஃப் ஸ்கிரின் சேர்த்து) ஆயிரத்தை தாண்டியது.

*     ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சிவகுமார் வில்லனாகவும், வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாகவும் நடித்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி.

*    ‘16 வயதினிலே படத்தில்தான் ரஜினி முதன் முறையாக பஞ்ச் டயலாக் பேசினார். பின்பு அந்த டயலாக்கை பல படத்தில் பேசினார். அந்த டயலாக்கையே தலைப்பாக கொண்டு ஒரு படமும் வெளியானது அந்த டயலாக் ‘இதெப்படி இருக்கு‘.

*     ரஜினி பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்த படம் ‘ஆடுபுலி ஆட்டம். ஒவ்வொரு வில்லத்தனத்தையும் செய்து விட்டு ‘இது ரஜினி ஸ்டைல் என்று வசனம் பேசுவார்.

*    கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரான ரஜினி பஸ் டிரைவராக நடித்த படம் ‘ஆறு புஷ்பங்கள்.

*    ரஜினி நடித்த முதல் திகில் படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்‘. படத்தில் அவருக்கு ஜோடி இல்லை.

*    ஒன்பது நாட்களில் நடித்து முடித்த படம் ‘மாங்குடி மைனர்‘. 6 நாட்களில் நடித்த படம் ‘அன்புள்ளரஜினிகாந்த்‘. ரஜினியின் வீட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட ஒரே படமும் இதுதான்.

*    அக்ரஹாரத்து இளைஞனாக பிராமணர்கள் போல் வசனம் பேசி நடித்த ஒரே படம் ‘சதுரங்கம்‘. குப்பத்து சென்னை தமிழ் பேசி நடித்த படம் ‘தப்பு தாளங்கள்‘.

*    ‘வணக்கத்துக்குரிய காதலியே முதல் தோல்விப் படம்.

*    நடித்த படங்களிலேயே ரஜினிக்கு பிடித்த படம் ‘முள்ளும் மலரும், ரஜினி மகள்களுக்கு பிடித்த படம் ‘மூன்று முகம்.

*    ஆங்கிலத்தில் வெளிவரும் கவ்பாய் ஸ்டைலில் நடித்த படங்கள் ‘தாய்மீது சத்தியம்‘, ‘அன்னை ஓர் ஆலயம்‘.

*    சிவாஜியுடன் நடித்த முதல் படம் ‘ஜஸ்டிஸ் கோபிநாத். சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார்.

*    முதல் பேண்டஸி படம் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்‘. ஒரிஜினல் கதையில் இல்லாத கமருதீன் என்ற கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது.

*    இளைஞன், நடுத்தர வயது, முதியவர் என்ற மூன்று பருவ கேரக்டரில் நடித்த படம் ‘ஆறிலிருந்து அறுபது வரை‘.

*    முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படமும், முதல் வெள்ளி விழா படமும் ‘பில்லா.

*    சூப்பர் ஸ்டார் பட்டத்தை ‘பைரவி‘ படத்தின்போது தந்தது கலைப்புலி எஸ்.தாணு. டைட்டில் கார்டில் ‘சூப்பர் ஸ்டார்‘ என்று போடப்பட்டது ‘நான் போட்ட சவால் படத்தில். ரஜினிக்கு பிடித்த நடிகரான எம்.ஆர்.ராதாவுடன் ரஜினி நடித்த ஒரே படமும் ‘நான் போட்ட சவால்‘தான்.

*    முதல் சினிமாஸ்கோப் படம் ‘பொல்லாதவன்‘. முதல் 70எம்எம் படம் ‘மாவீரன்‘.

*    மீசையை மழித்து விட்டு நடித்த முதல் படம் ‘தில்லுமுல்லு‘. கே.பாலச்சந்தர் படத்தின் கதையைக்கூறி ‘உன் அழகான மீசையை இழக்க வேண்டும்‘ என்றார். மறுநாளே மீசையை மழித்துவிட்டு கே.பி. முன்னாடி போய் நின்று ‘நீங்க எதிர்பார்த்த மாதிரி இருக்கிறேனா‘ என்றார்.

*    ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆருக்காக எழுதி வைத்திருந்த கதைதான் ‘ராணுவ வீரன்‘. அவர் முதல்வராகிவிட்டதால். அந்த கதையில் நடிக்க தகுதியானவர் ரஜினிதான் என்று அவரை வைத்து படம் எடுத்தார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ரஜினியுடன் நடித்த ஒரே படமும் இதுதான்.

*    ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம் ‘எங்கேயோ கேட்ட குரல்.

*    ரஜினியின் சில படங்களுக்கு கடைசி நேரத்தில் பெயர் மாற்றப்பட்டது. ‘நானே ராஜா நீயே மந்திரி என்ற பெயர் ‘தம்பிக்கு எந்த ஊரு என்று மாறியது, ‘நான் காந்தி அல்ல படம் ‘நான் மகான் அல்ல என்று ஆனது. ‘காலம் மாறிப்போச்சு ‘தர்மதுரை ஆனது.

*    ‘தர்மதுரை படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படம் தாமதமாகி பொங்கலுக்கு வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ரசிகர்கள் தமிழ் நாடெங்கும் தர்மதுரையை வரவேற்று போஸ்டர் ஒட்டிவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட ரஜினி, ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்று கருதி 72 மணிநேரம் தொடர்ந்து நடித்து பொங்கலுக்கு படத்தை வெளியிடச் செய்தார்.

*    ‘மூன்று முடிச்சு‘, ‘மாப்பிள்ளை‘, ‘மன்னன்‘, ‘படையப்பா‘ படங்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. மூன்றிலுமே ரஜினியோடு மோதுபவர்கள் பெண் கேரக்டர்கள்.

*    ‘பாண்டியன்‘ படம் எஸ்.பி.முத்துராமன் டீமுக்காகவும், அருணாச்சலம் படம் பல்வேறு காலகட்டங்களில் தனக்கு உதவிய நண்பர்களுக்காகவும் ரஜினி நடித்துக் கொடுத்த படம்.

*    நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது ரஜினி ‘என் சம்பளத்தை நான்தான் தீர்மானிப்பேன் என்று கூறியிருந்தார். அதனால் விநியோகஸ்தர்கள் சங்கம் ரஜினிக்கு ரெட் போட்டது­. ‘உழைப்பாளி படம் வெளிவந்த போது அதை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை. ரஜினி தானே சொந்தமாக வெளியிட்டார். படம் 100 நாட்கள் ஓடியது.

*    முதன் முறையாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட படம் ‘முத்து‘. ஜப்பானில் அவருக்கு பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தியது. முத்துவின் ஜப்பானிய பெயர் டான்சிங் மகராஜா.

*    ‘படையப்பா‘ படம் 21 ஆயிரம் அடி எடுக்கப்பட்டிருந்தது. எந்த காட்சியையும் ­ குறைக்க முடியவில்லை. படத்துக்கு இரண்டு இடைவேளை விட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ரஜினிதான் ‘ரசிகனை ரொம்ப கொடுமைப்படுத்தக்கூடாது என்று வேடிக்கையாக சொல்லி படத்தின் நீளத்தை குறைத்து வெளியிடச் செய்தார்.

*    ரஜினி தயாரித்த முதல் படம் ‘மாவீரன். ரஜினி திரைக்கதை வசனம் எழுதியது ‘வள்ளி. பின்னணி பாடிய படம் ‘மன்னன்.

*    ரஜினிக்கு பிடித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். அதேபோல் பாலிவுட்டில் அவருக்கு நெருங்கிய நண்பரும் அமிதாப்தான். அமிதாபுடன் சேர்ந்து அந்தா கானூன், கிரிஃப்தார், ஹம் உள்ளிட்ட இந்தி படங்களில் ரஜினி நடித்துள்ளார்.

*    மற்றவர்களை பற்றி பேசுவதாக இருந்தால் என்னிடம் வராதீர்கள் என மறைந்த காமெடி நடிகர் ஒருவரிடம் போல்டாக சொன்னவர் ரஜினி. பல நாட்கள், பல மணி நேரம் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறேன். ஒருவரை பற்றி கூட அவர் புறம் பேச¤ கேட்டதில்லை... இப்படி சொன்னவர் கவிஞர் வைரமுத்து.

*    சின¤மாவில் ஸ்டார்ஸ், சூப்பர் ஸ்டார்ஸ், மெகா ஸ்டார்ஸ் இருக்கிறார்கள். சினிமாவில் நான் கண்ட ஒரே மனிதர் என ரஜினி பாராட்டியது தர்மேந்திராவை மட்டும்தான். சென்னையில் நடந்த தனது ஆசிரமம் பள்ளியின் ஆண்டு விழாவில் தர்மேந்திராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து இப்படி சொன்னார் ரஜினி.

ஸ்டைலான நடிப்பால் மட்டுமல்ல தனது பஞ்ச் டயலாக்குகள் மூலமாகவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பல படங்களில் அவர் பஞ்ச் டயலாக்குகள் பேசியிருந்தாலும் குறிப்பிட்ட சில படங்களின் வசனங்கள் மீண்டும் மீண்டும் ரசிகர்களாலும், பொதுமக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அப்படி ‘இறவாப்புகழ்பெற்ற’ ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளில் சில இதோ:


16 வயதினிலே :  இதெப்படி இருக்கு?


முரட்டு காளை :  சீ.... விடுவேன்!


தர்மதுரை :  நல்லவனா இருக்கலாம். ஆனால் ரொம்ப நல்லவனா இருக்க கூடாது


முத்து :  நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்.


அருணாச்சலம் : ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்.


அண்ணாமலை :  நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்.

சிவாஜி : பேர கேட்டாலே சும்....மா அதிருதுல்ல!


படையப்பா :  என் வழி... தனி வழி!

பாட்ஷா : நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி.


அண்ணாமலை :  கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.கஷ்டப்படாம கெடச்சா என்னிக்கும் நிலைக்காது


பாபா : நான் சொல்லிட்டு யோசிக்கறவன் இல்ல, யோசிச்சுட்டு சொல்றவன்.


பாட்ஷா : நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விடமாட்டான்.  கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனா கை விட்டுடுவான்.


வள்ளி : நீ விரும்பறவள கட்டிக்கறத விட, உன்ன விரும்பறவள கட்டிக்கிட்டா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.


மன்னன் : என்ன தான் துணிச்சல் இருந்தாலும், பெண்கள் பொறுமையா இருந்தா தான் பெருமையா வாழ முடியும்!


படையப்பா : அதிகமா கோவப்படற பொம்பளையும், அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது!


தளபதி : நட்புனா என்னனு தெரியுமா உனக்கு? நண்பன்னா என்னனு தெரியுமா உனக்கு?


இன்னும்... ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் இருக்குங்க. ரசிகர்களுக்கு அதெல்லாம் எப்போதும் மனசுல நிலைச்சிருக்கும்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments