31st of December 2013
சென்னை::காதலில் சொதப்புவது எப்படி’ இயக்குனர் அடுத்து இயக்கி கொண்டிருக்கும் திரைப்படம்தான் ‘வாயை மூடி பேசவும்’ .
இதன் மூலம் மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம்
வந்துகொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழில் நாயகனாக
அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார்.
தமிழ், மலையாளம் என
இரு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ சார்பில்
சசிகாந்த் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘வாய மூடி பேசவும்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவுக்கு வந்துவிட்டதாம்.
அதுவும் 52 நாட்களிலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே ‘சலாலா மொபைல்ஸ்’ என்கிற மலையாளப் படத்திலும் துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கின்றனர்
Comments
Post a Comment