ரஜினி பிறந்த நாளை 4 நாட்கள் கொண்டாட ரசிகர்கள் திட்டம்!

11th of December 2013
சென்னை::
நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள். அதனை அவரது ரசிகர்கள் நான்கு நாட்களுக்கு கொண்டாட இருக்கிறார்கள். அவற்றில் சில துளிகள்.

நாளை காலை 7 மணிக்கு ராகாவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குகிறார்கள். அதைத் தொடர்ந்த தி.நகர் வெங்கடேச பெருமாள் கோவிலில் ரஜினி பெயரில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

அண்ணா நகரில் ரஜினியின் வயதை குறிக்கும் வகையில் 64 பேருக்கு வேஷ்டியும், 64 பேருக்கு சேலையும் வழங்கப்படுகிறது.

தாம்பரம் பகுதி ரசிகர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊனமுற்றோருக்கு தையல் எந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள் வழங்குகிறார்கள்.

நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள ஆரு நிவாஸ் சிறுவர் இல்லத்தில் 100 பேருக்கு உணவு வழங்குகிறர்கள். சைதாப்பேட்டை சுப்பிரணிய சாமி கோவிலில் சிறப்பு பூஜையும் 128 பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்குகிறார்கள்

வளசரவாக்கம் பகுதி ரசிகர்கள் சார்பில் நேசம் காப்பகத்தில் உணவு வழங்கப்படுகிறது.
சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் நான்கு நாட்களுக்கு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானங்களும் வழங்குகிறார்கள். சென்னை மற்றும் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்கள்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments