1th of December 2013
சென்னை::செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடித்த ‘இரண்டாம் உலகம்’ படத்தைத் தயாரித்தவரையில் பிவிபி சினிமாஸ் நிறுவனத்திற்கு ஏறக்குறைய 35 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்.
இந்த படத்திற்கு முதலில் இவ்வளவு செலவு செய்தததே தவறு. இந்த படத்தின் கருவை மக்கள் ரசிக்கவே இல்லை. புத்திசாலித்தனமான ரசிகர்கள் என்று சொல்லக் கூடியவர்களும் ரசிக்கவில்லை. இப்படிப்பட்ட கதையை முதலில் உருவாக்கியிருக்கவே கூடாது.
அடுத்தவரின் பணத்தில் இப்படிப்பட்ட கதையில் பயன்படுத்துவதே தவறு. இயக்குனரை நம்பி பணம் போடும் தயாரிப்பாளரை அந்த இயக்குனர் காப்பாற்ற வேண்டும்,” என்றும் கேயார் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்ல இந்த படத்தை எடுக்கும் போதே தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் செல்வராகவனும் லாபம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் சரிபாதி பங்கு என ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம்.
அப்படிப்பார்த்தால் செல்வராகவன் தயாரிப்பாளருக்கு 17.5 கோடி ரூபாய் திருப்பித் தரவேண்டுமாம்.
அதனால் தயாரிப்பு நிறுவனமும் செல்வராகவன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளது.
‘இரண்டாம் உலகம்’ படத்தை எடுத்து விட்டு இரண்டு பட்டு நிற்கிறார்கள் தயாரிப்பாளரும் இயக்குனரும்.
Comments
Post a Comment