17th of December 2013
சென்னை::சினிமா பைனான்சியர் பைசூல் ஜாமீன் மனு மூன்று முறை தள்ளுபடி ஆனதால் அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று நடிகை ராதா வற்புறுத்தினார்.

சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. சாலிகிராமத்தில் வசிக்கிறார்.
இவர் தொழில் அதிபரும், சினிமா பைனான்சியருமான பைசூல் மீது பரபரப்பாக குற்றச்சாட்டுகளை கூறினார். திருமணம் செய்வதாக ஏமாற்றி 6 வருடம் பைசூல் தன்னுடன் குடும்பம் நடத்தியதாக கூறினார். தன்னிடம் இருந்து ரூ.50 லட்சத்தை ஏமாற்றி வாங்கி விட்டதாகவும் தெரிவித்தார். படுக்கையறை காட்சிகளை படமாக்கி வைத்துக் கொண்டு மிரட்டுவதாகவும் கூறினார்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சென்று இது குறித்து புகார் அளித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை பைசூல் மறுத்தார். போலீசார் கைது செய்வார்கள் என்று பயந்து தற்போது தலைமறைவாக இருக்கிறார். கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடியாகி விட்டது.
இது குறித்து ராதா அளித்த பேட்டி வருமாறு:–
பைசூல் ஜாமீன் மனுக்கள் மூன்று முறை கோர்ட்டில் தள்ளுபடியாகி விட்டன. அதன் பிறகும் அவர் கைது செய்யப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில முக்கிய புள்ளிகள் பைசூலுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். அவர்கள் யார் என்ற விபரங்களை விரைவில் வெளியிடுவேன். பல்வேறு பெண்கள் அமைப்பினர் என்னை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சட்டத்தை ஏமாற்றி தலைமறைவாக இருக்கும் பைசூலை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும். என்னிடம் இருந்து அபகரித்த ரூ.50 லட்சத்தையும் மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு ராதா கூறினார்.

Comments
Post a Comment