5th of December 2013
சென்னை::'மங்காத்தா 2'விற்கு தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருமே, அஜித்தின் சம்மதத்திற்காக காத்திருக்கிறார்கள்.
அஜித், த்ரிஷா, பிரேம்ஜி, வைபவ், அஞ்சலி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க, வெங்கட்பிரபு இயக்கிய படம் 'மங்காத்தா'. தயாநிதி அழகிரி தயாரிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று, வசூலை அள்ளியது.
அதனைத் தொடர்ந்தே, 'மங்காத்தா 2'க்கான பேச்சுகள் தொடங்கின. 'மங்காத்தா' படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, " 'மங்காத்தா 2'விற்கான கதை தயாரா இருக்கு. ஆனால், அஜித் இப்போது தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்."என்று தெரிவித்தார்.
இயக்குநர் வெங்கட்பிரபு, "‘மங்காத்தா 2’ இயக்க நான் தயாரா தான் இருக்கேன். ஆனால், அஜித் அடுத்த ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கிறார். எல்லாம் நல்லபடியாக அமைந்தால் நான் இயக்க தயார்" என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர், இயக்குநர் இருவருமே 'மங்காத்தா 2'விற்கு தயாராக இருக்கிறார்கள்.
இருவரும் எதிர்பார்ப்பது அஜித்திடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு, "'மங்காத்தா 2' கதையை தயார் பண்ணுங்க பிரபு. கால்ஷீட் தயாரா இருக்கு" என்று கூற வேண்டும். அஜித் கூறிய அடுத்த நிமிடம், இருவருமே குஷியாகி விடுவார்கள்.
வெங்கட்பிரபுவிற்கு போன் செய்வாரா அஜித்.....?
Comments
Post a Comment