25th of December 2013
சென்னை::லட்சுமி மேனன் நடிப்பதால் முதலில் நடிக்க மறுத்து பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டார் இனியா. வாகை சூடவா, அம்மாவின் கைபேசி, மவுன குரு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் இனியா. விஷால் நடிக்கும் நான் சிவப்பு மனிதன் படத்தில் நடிக்க இவரிடம் கால்ஷீட் கேட்டார் இயக்குனர் திரு. ஏற்கனவே இதில் ஹீரோயினாக லட்சுமி மேனன் நடிப்பதால் இரண்டாவது கதாநாயகியாக ஒப்புக்கொள்ள மறுத்தார். படத்தில் ஹீரோயினுக்கு சமமான முக்கிய கதாபாத்திரம்தான் இது என்று இயக்குனர் கூறியதுடன் கதையும் சொன்னார். முதலில் தயங்கிய இனியா பிறகு நடிக்க ஒப்புக் கொண்டார். கதாபாத்திரத்தின் தன்மையே தான் இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் என்றார் இனியா. விஷால், லட்சுமி மேனன் நடிக்கும் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முதல் இனியா ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.

Comments
Post a Comment