விஜய் சினிமாவிற்கு அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு: திரையுலகினர் வாழ்த்து!!!

 5th of December 2013
சென்னை::இளையதளபதி விஜய் இன்றுடன் நடிக்கவந்து 21 வருடங்கள் பூர்த்தி ஆகின்றன. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்றுதான் இவர் நடிகராக அறிமுகமாகிய 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் வெளியானது.

இந்த சாதனையை வாழ்த்தி திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை, 56 படங்களில் நடித்துள்ள இவரது அடுத்த படமான 'ஜில்லா' வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பொங்கல் ரிலீசாக வெளிவர உள்ளது.

இதனைத் தொடர்ந்து மாபெரும் வெற்றிப்படமான 'துப்பாக்கி'யை இயக்கிய ஏ.ஆர் முருகதாசுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

முன்னணி நடிகர்களின் வரிசையில் உள்ள நடிகர் விஜய்யின் சில படங்கள் சுமாராக ஓடியிருந்தபோதிலும் அவரது வெற்றிப்படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'குஷி', 'கில்லி', 'போக்கிரி,' 'நண்பன்' மற்றும் 'துப்பாக்கி' போன்ற அவரது பல படங்கள் வெற்றிக்கோட்டை தொட்டவையாகும். இந்த சாதனை மூலம் ரூ.50 கோடிக்கு மேல் வியாபாரமாகும் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மூன்று பேரில் இவரும் ஒருவராகத் திகழ்கின்றார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments