2013 இசை கண்ணோட்டம்...!!!


31st of December 2013
சென்னை::யுவனின் வீழ்ச்சியும், இமானின் எழுச்சியும் : கடந்த ஆண்டுவரை திரைஇசையில் முன்னணியில் இருந்த யுவன் சங்கர் ராஜா இந்த ஆண்டும் அதிக படங்களில் இசையமைத்து முதல் இடத்தில்தான் இருக்கிறார். ஆனால் ஹிட் பாடல்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. சமர், கேடிபில்லா கில்லாடி ரங்கா, தில்லுமுல்லு, பிரியாணி மூன்று பேர் மூன்று காதல், ஆதிபகவன், ஆதலால் காதல் செய்வீர், ஆகிய படங்களில் ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே ஹிட்டானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்பம், பிரியாணி இரண்டுமே படம் நன்றாக ஓடினாலும் பாடல்கள் பேசப்பட வில்லை. தங்க மீன்கள் படத்தில் மட்டுமே பழைய யுவனைப் பார்க்க முடிந்தது.

இமான்

மைனாவில் தன் வெற்றிப் பயணத்தை துவக்கிய இமான். அதை 2013 வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் இசை அமைத்த படங்கள் ஹிட்டாகாவிட்டாலும் பாடல்கள் ஹிட்டாகிவிட்டன. இந்த ஆண்டு அவர் இசை அமைத்த தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டிய நாடு மூன்றுமே ஹாட்ரிக் ஹிட் அடித்தது. ஊதா கலரு ரிப்பன்... பாட்டு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஹிட்டுக்கும், பை பை கலாசி பை... பாண்டிய நாடு ஹிட்டுக்கும் ஒரு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜில்லா மூலம் 2014ம் ஆண்டின் கணக்கை துவக்குகிறார். பிரபு சாலமனின் கயல், வடிவேலுவின் தெனாலிராமன், என்னமோ ஏதோ, தேரோடும் வீதியிலே, சிகரம் தொடு, என்னதான் பேசுவதோ, பேரலை என 2014ம் ஆண்டும் இமானின் இசையில் மிதக்க இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ்குமார்:
 
ஜி.வி.பிரகாஷ்குமார் பரதேசி, அன்னக்கொடி, தலைவா, ராஜாராணி, உதயம் என்.எச் 4, நான் ராஜாவாக போகிறேன் படங்களுக்கு இசை அமைத்திருந்தார். இதில் ராஜாராணியில் அனைத்து பாடல்களும், மற்ற படங்களில் ஒன்றிரண்டு பாடல்களும் ஹிட்டானது. பரதேசியின் பின்னணி இசை பரவலான பாராட்டை பெற்றது.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரகுமான் கடல், மரியான் படங்களுக்கு இசை அமைத்தார். பாடல்கள் ஹிட்டானதும் படங்கள் தோல்வி அடைந்தது.

தமன் :
 கண்ணா லட்டு தின்ன ஆசையா, பட்டத்துயானை, அழகுராஜா, சேட்டை படங்களுக்கு இசை அமைத்தார்.

அனிருத் :
 எதிர்நீச்சலில் அனைத்து பாடல்களையும் அழகாக கொடுத்தார். வணக்கம் சென்னையில் ஒரு சில பாடல்கள் வரவேற்பை பெற்றது.

ஸ்ரீகாந்த் தேவா :
 ஸ்ரீகாந்த் தேவா 5 படங்களுக்கு இசை அமைத்தார் எதுவும் ஹிட்டாகவில்லை.

ஹாரிஸ் ஜெயராஜ் :
இரண்டாம் உலகம், என்றென்றும் புன்னகைக்கு இசை அமைத்திருந்தார். பெரியதாக எதுவும் மனதை கவரவில்லை.

வித்யாசாகர் - (ஜன்னல் ஓரம்), விஜய் ஆண்டனி - (ஹரிதாஸ்), தேவி ஸ்ரீபிரசாத் - (அலெக்ஸ் பாண்டியன்) படங்களுக்கு இசை அமைத்திருந்தனர்.

இளையராஜா :
இந்த தலைமுறையிலும் இளையராஜா தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார். மறந்தேன் மன்னித்தேன், சித்திரையில் நிலாச்சோறு படங்களுக்கு அவர் அமைத்த இசையும், பாடல்களும் பெரிதாக மக்களை கவரவில்லை. ஆனால் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், தலைமுறைகள் படத்துக்கு அவர் அமைத்த பின்னணி இசை இன்றும் அவர்தான் இசைராஜா என்பதை நிரூபித்தது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments