விஜயகாந்தின் இளையமகன் நடிக்கும் சகாப்தம் - வரும் டிச.12ல் தொடக்கம்!!!

9th of December 2013
சென்னை::விஜயகாந்தின் இளையமகன் சண்முகப் பாண்டியன் ஹீரோவாகக் களமிறங்குகிறார். அவர் நடிக்கும் முதல் படம் "சகாப்தம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. 
 
படத்தின் பூஜை வரும் டிசம்பர் 12-ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சாலிகிரமாத்தில் உள்ள ஆண்டள் ஆழகர் இல்லத்தில் நடைபெறுகிறது.
இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன் நிறு‌வனத்தின் சார்பில் எல்கே சுதிஷ் தயாரிக்கிறார். நவீன் கேபிபி கதை எழுதியுள்ளார்  வேலுமணி வசனம் எழுதியிள்ளார்., டி இ சந்தோஷ் ராஜன் இப்படத்தை இயக்குகிறார்.
பட பூஜையில் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் திரையுலகினர், கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற விவரங்கள் அன்று அறிவிக்கப்படுகிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments