6th of December 2013
சென்னை::நிமிர்ந்து நில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வருகிற 11ல் வெளியிடப்படும் என்று ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா பால், சரத்குமார் நடித்திருக்கும் நிமிர்ந்து நில். இதில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது.
வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. தெலுங்கில் ஜெயம் ரவிக்குப் பதிலாக நானி நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை வருகிற 11ம் தேதி வெளியிட உள்ளனர். நிமிர்ந்து நில் படத்தினைத் தொடர்ந்து ஜெயம் ரவி அவரது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
Comments
Post a Comment