26th of November 2013
சென்னை::பில்லா 2, ஆரம்பம் படங்களில் கெட்ட பையனாக வந்த அஜீத் வீரத்தில் நல்லவராக நடிப்பதுடன் காதலும் செய்கிறார்.
அஜீத் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மங்காத்தாவில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்காத கெட்டவனாக நடித்திருந்தார். இருப்பினும் த்ரிஷாவுடன் டூயட் பாடியிருப்பார்.
இதையடுத்து நடித்த படங்களிலும் அவர் தொடர்ந்து கெட்டவனாகவே நடித்து வந்தார்.
பில்லா 2 படத்தில் அஜீத் ஓடி ஓடி வில்லன்களை தாக்குவதில் தான் குறியாக இருந்தார். ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டனுக்கு படத்தில் வேலையில் இல்லாமல் இருந்தது. அஜீத் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்காத கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆரம்பம் படத்தில் காதல் செய்ய நயன்தாரா இருந்தபோதிலும் அஜீத் குமார் நண்பனின் மரணத்திற்கு பழிவாங்குவதில் மட்டுமே குறியாக இருந்தார். காதல் அவர் கண்ணில் படவில்லை.
தொடர்ந்து கெட்டவனாக நடித்து வந்த அஜீத் வீரம் படத்தில் நல்லவராக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அவர் தமன்னாவுடன் சேர்ந்து டூயட் பாடியுள்ளாராம். இந்த டூயட் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.
வீரம் படத்தில் அஜீத்தை பாசமுள்ள அண்ணனாக மட்டுமின்றி ரொமான்டிக் ஹீரோவாகவும் பார்க்கலாம். வீரம் பொங்கல் விருந்தாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment