19th of November 2013
சென்னை::அடுத்த படத்துக்கான ஹீரோயினை தேர்வு செய்யும் டீமிலிருந்து விலகியுள்ளார் சிவகார்த்திகேயன். தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த படம் எதிர்நீச்சல். இந்த படத்தை இயக்கிய துரை செந்தில்குமார், அடுத்ததாக மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையே இயக்குகிறார். அந்த படத்தையும் தனுஷ்தான் தயாரிக்கிறார்.
வழக்கமாக ஹீரோயின், மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேர்வு செய்யும் டீமில் இயக்குனர், உதவி இயக்குனர்களுடன் அப்பட ஹீரோவும் இடம்பெறுவார். ஹீரோயினாக யாரை தேர்வு செய்யலாம் என்பதில் ஹீரோவின் கருத்துதான் மேலோங்கி இருக்கும். அந்த விதத்தில் துரை செந்தில்குமாரின் டீமில் சிவகார்த்திகேயனும் இருந்தார். ஆனால் இப்போது அந்த டீமிலிருந்து நைசாக அவர் நழுவி உள்ளாராம். இதற்கு காரணம், பிந்து மாதவியால் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புதான் என்கிறார்கள¢.
சிவகார்த்திகேயனுக்கும் பிந்து மாதவிக்கும் இடையே காதல் என தகவல் கசிந்ததால் இனி பிந்துவுடன் நடிப்பதில்லை என அவர் முடிவு செய்தார். அதேபோல் ஹீரோயின்கள் தேர்வு விஷயத்தி லும் தலையிடுவதில்லை என சிவகார்த்திகேயன் முடிவு எடுத்துள்ளாராம். இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அமலா பால் நடித்தால் நன்றாக இருக்கும் என பட தயாரிப்பாளரான தனுஷ் கூறியுள்ளார். யார் வேண்டுமானாலும் நடிக்கட்டும். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்துவிட்டாராம் சிவகார்த்திகேயன்.

Comments
Post a Comment