29th of November 2013
சென்னை::மணிரத்னம் அடுத்ததாக 'காற்று' எனும் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடைசியாக இவர் இயக்கிய ராவணன், கடல் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவின. இதனால் அவர், தன்னுடைய அடுத்தப் படத்தை இந்தியில் ரன்பீர் கபூரை வைத்து இயக்கப் போகிறார் என்று செய்தி வெளியானது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக மணிரத்னத்தின் அடுத்தப் படமும் தமிழ்தான் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. சமீபத்தில் பிலிம்சேம்பரில் 'காற்று' என்ற தலைப்பு பதிவு செய்யப்பட்டது. இதை பதிவு செய்தது மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் என கூறப்படுகிறது.
எனவே, மணிரத்னத்தின் அடுத்தப் படமாக காற்று இருக்கலாம் என்று இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் இதில் மோகன்லாலின் மகன் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எதுவுமே இன்னும் முடிவாகவில்லை.
Comments
Post a Comment