சென்னை::அஜித்துடன் இணைந்த ‘மங்காத்தா’ படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய பின் ஸ்டார் இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் வெங்கட் பிரபு.
‘பிரியாணி’ ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே அஜித், விஜய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்ற அவரது மிகப் பெரிய ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அது பற்றி வெங்கட் பிரபு கூறுகையில்,
அஜித், விஜய் இருவரையும் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வச்சி ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் ஆசை.
இதை அவர்களிருவரிடமும் சொன்னேன். இருவரும் நடிக்கத் தயாராக உள்ளனர்.
ஆனால், இருவருமே அந்த படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறார்கள். இவர்களிருவருக்கும் சரிசமமான ஸ்கிரிப்ட் அமைஞ்சிட்டால், கண்டிப்பா அவங்களை வச்சி படம் இயக்குவேன், ” என்கிறார் வெங்கட் பிரபு.
படத்துக்கு டைட்டிலும் ‘தல தளபதி’ன்னே வச்சிடலாம்…நல்லா இருக்கும்…
Comments
Post a Comment