25th of Novembe
சென்னை::பிரியாணி கொடுத்தே, நடிகர், நடிகைகளை, உங்கள் நட்பு வளையத்துக்குள் கொண்டு வருகிறீர்களாமே என, கேட்டால், கெக்கெ, பிக்கே என, சிரிக்கிறார் ஆர்யா.
இதெல்லாம், சும்மா பீதியை கிளப்புற வேலை பாஸ். பிரியாணி கொடுத்தெல்லாம், யாரையும் மடக்க முடியாது. நட்பு என்பது, ஒவ்வொருவரும், மற்றவர்களுடன் பழகும் விதத்தை பொறுத்தது. நாம், மற்றவர்களிடம் நட்பாக பழகினால், மற்றவர்களும், நம்முடன் நட்பாக பழகுவார். இதுதான், என்னுடைய கொள்கை என்கிறார்.
மேலும், புதுமுக நடிகைகள் என்றாலும், ஈகோ பார்க்காமல், நானே, வலியச் சென்று, அவர்களிடம் பேசுவேன். எந்த நேரமும், ஜாலியாக பேசுவதால், அவர்களும், என்னுடன் ஜாலியாக பழகுகின்றனர். மற்றபடி, இதில், பெரிய வித்தை எதுவுமில்லைஎன்கிறார், ஆர்யா.
Comments
Post a Comment