மெசேஜ் சொல்லணும்! : சினிமான்னா!!!

14th of November 2013
சென்னை::விஜய் அடிக்கடி சுற்றுலா செல்லும் நாடு துபாய். ஒரு வாரம் கேப் கிடைத்தாலும் குடும்பத்தோடு துபாய் பறந்துவிடுவார். அங்கே உலகிலேயே உயரமான புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் இருக்கும் அர்மானி ஹோட்டல்தான் விஜய்யின் ஃபேவரைட் ஸ்பாட். ஒட்டுமொத்த துபாயிலும் என்னென்ன ஷாப்பிங் பண்ணமுடியுமோ, அது எல்லாமே அங்கேயே கிடைக்கும் என்பதுதான் சிறப்புக் காரணம்.
 
தமிழ்நாட்டில், அடிக்கடி அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்குப் போவார். முன்பெல்லாம் பிராட்வே புனித அந்தோணியார் சர்ச்சுக்குப் போவார். இப்போதும் போக ஆசைதான். ஆனால், ‘உள்ளே போறதுக்குள்ளே கூட்டம் கூடிருது’ என்று அங்கு போகமுடியாத வருத்தத்தை வீட்டில் சொல்வாராம்.
 
கதை கேட்டு முடிவெடுக்கத்தான் ரொம்ப யோசிப்பார். ஆனா, கமிட் ஆன பிறகு டைரக்டர் சொல்வதை இம்மி பிசகாமல் அப்படியே செய்து விடுவார் விஜய். ‘டான்ஸ்ல மட்டும் ஏதாவது ஐடியா சொல்வேன். நம்ம ஸ்டைல்னு அதுல ஏதாவது இருக்கணுமே’ என்று கண் சிமிட்டி சிரிப்பார் ப்ரோ!
tamil matrimony_HOME_468x60.gif

Comments