பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு தொடர்ந்து கவலைக்கிடம்: உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராட்டம்

6th of November 2013
சென்னை::பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு. ‘ஒற்றன்’, ‘பாய்ஸ்’, ‘பைவ்ஸ்டார்’, ‘தூள்’, ‘சிவகாசி’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘மாப்பிள்ளை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிட்டிபாபுவுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது. இதற்காக அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் படங்களில் நடிக்காமல் வீட்டில் ஓய்வு எடுத்தார்.

தற்போது அவர் மீண்டும் சில படங்களில் நடிக்க தொடங்கினார். நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை முகப்பேரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிட்டிபாபு உடல்நிலை மோசமானது. கோமா நிலைக்கு சென்றார்.

சிட்டிபாபு மூளையில் கட்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றலாமா என்றும் யோசிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments