13th of November 2013
சென்னை::நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களின் தோல்வி எதிரொலியாக கெளதம்மேனனின் இயக்கத்தில் நடிக்கவே முன்னணி ஹீரோக்கள் அச்சப்படுகின்றனர். அதோடு, எந்த ஹீரோவாக இருந்தாலும் கதையே சொல்ல மாட்டேன் என்ற தனது கொள்கையில் அவர் இன்னமும பிடிவாதமாக இருந்து வருவதால், யோஹன் அத்தியாயம் ஒன்று படத்திலிருநது விஜய் விலகியதைத் தொடர்ந்து துருவநட்சத்திரம் படத்தில் நடிப்பதாக இருந்த சூர்யாவும் விலகி விட்டார்.
இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கெளதம்மேனன் படத்தில் நடிக்கயிருந்த அஜீத், இப்போது அவரது புதிய படத்தில் நடிக்கயிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் இன்னும் முற்றுபெறவில்லையாம். கூடவே தற்போது அஜீத் வீரம் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் ஒருவேளை கெளதம் படத்தில் அவர் நடித்தாலும் அந்த படத்தை முடித்த பிறகுதான் நடிப்பாராம்.
அதனால், அதுவரைக்கும் ஓய்ந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கும் கெளதம்மேனன், தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த சிம்புவைக்கொண்டு தற்போது புதிய படத்தை தொடங்கியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. வேட்டைமன்னன், வாலு படங்களை முடித்து விட்ட சிம்பு, தற்போது பாண்டிராஜின் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, கெளதம் படத்திலும் நடிக்கிறாராம் சிம்பு. இது உறுதி செய்யப்பட்டு விட்டதால், சிம்புவுக்கேற்ற ஜோடியை பாலிவுட், ஹாலிவுட் என்று தீவிரமாக தேடி வருகிறாராம் கெளதம்மேனன்.

Comments
Post a Comment