அதுதான் அஜீத்: ஆர்யா பாராட்டு!!!

3rd of November 2013
சென்னை::அஜீத், என்னை சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அஜீத் எப்போதும் என் பேவரைட். அவரது ஸ்டைலுக்கு நான் தீவிர ஃபேன். அவருடன் நடித்தபோது, சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார். அதே சமயம், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னுடன் அடித்த அரட்டையெல்லாம் ஒரு நல்ல நண்பரை எனக்கு ஆரம்பம் பெற்றுத் தந்துள்ளது.

அஜீத்துக்கு காயம் ஏற்பட்ட போது முழு டீமும் கலங்கிப்போச்சு. டூப் போடாம அஜீத் நடிச்சாரு. எதிர்பாராதவிதமா அந்த விபத்து நடந்துருச்சு. ஆனா ஒண்ணு சொல்லணும் அஜீத்தோட தில் மெய்சிலிர்க்க வச்சுது. படத்தில் என்னுடைய நடிப்பை அஜீத் பாராட்டியது அவருடைய பெருந்தன்மையை காட்டுது.

படத்துல தனக்கு இணையா இன்னொரு ஹீரோ நடிக்கிறது எந்த சூப்பர் ஸ்டாரும் ஏத்துக்க மாட்டாங்க. ஆனா அதை ஏத்துக்கிட்டது மட்டுமில்ல. எனக்கு முழு சப்போர்ட்டும் பண்ணினாரு. பட விளம்பரத்துல தன்னோட பெயரோடு என் பெயரும் வர வச்சாரு. அதுதான் அஜீத் என இவ்வாறு ஆர்யா கூறினார்
 
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments