21st of November 2013
சென்னை::பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. கடைசிகட்டமாக விஜய்யும் - பிரிட்டிஷ் மாடல் ஸ்கேர்லட் வில்சனும் இணைந்து ஆட்டம் போடும் பாடல் ஒன்றை படமாக்குகிறார்கள். டான்ஸில் பட்டையைக் கிளப்பும் விஜய்யும், அவருக்கு இணையாக ஆடும் திறமை பெற்ற ஸ்கேர்லட்டும் இணைந்து ஆடவிருக்கும் இப்பாடல் ரசிகர்களை தியேட்டரில் எழுந்து நின்று ஆட வைக்கும் என்கிறது ‘ஜில்லா’ டீம்.
ஏற்கனவே தெலுங்கில் ‘யவடு’, ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’, ஹிந்தியில் ‘ஷாங்காய்’ போன்ற படங்களில் ஆடி புகழந்தடைந்தவர் ஸ்கேர்லட் வில்சன்.
ஏற்கனவே தெலுங்கில் ‘யவடு’, ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’, ஹிந்தியில் ‘ஷாங்காய்’ போன்ற படங்களில் ஆடி புகழந்தடைந்தவர் ஸ்கேர்லட் வில்சன்.
Comments
Post a Comment