அஜித்தை மீண்டும் அப்செட்டாக்கிய ரசிகர்கள்!!!

2nd of November 2013
சென்னை::அஜித், தனக்கு பட்டப்பெயரும் வேண்டாம், ரசிகர் மன்றமும் வேண்டாம் என்று கூறியது மட்டும் இன்றி, அதிரடியாக தனது மன்றங்களையும் கலைத்துவிட்டார். அதற்கு காரணம் அவருடைய ரசிகர்கள் சிலர், அவரை மீறி அரசியல், அறிக்கை என்று விட்டதுதான்.

ரசிகரும் தேவையில்லை, மன்றங்களும் தேவையில்லை என்று அஜித் கூறினாலும், நேற்று அவர் நடி

இந்த நிலையில், தமிழகத்தின் சில திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கலாட்டா செய்ததாகவும், அங்குள்ள சில பொருட்களை உடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் அஜித் காதுக்கும் சென்றுள்ளது.

ஏற்கனவே, அப்சட்டாகி மன்றத்தை கலைத்த அஜித், இந்த செய்தியால் மீண்டும் அப்செட்டாகி விட்டாராம். இப்போ எதை கலைப்பது என்று யோசித்தவர், இறுதியில் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறுவது போல ஒரு அறிவுரை அறிக்கையை தனது உதவியாளர் மூலம் வெளியிட்டுள்ளார்.

அதில் அஜித் கூறியதாவது:

திரைப்படம் என்பது அனைவரும் பார்த்து மகிழவே எடுக்கப்பட்டது.எனது ரசிகர்களின் அன்பை நான் அறிவேன். இந்நிலையில் தமிழ்நாட்டில் சில திரையரங்கில் ரசிகர்கள் சேதப்படுத்துவதாக வந்த செய்தி என்னை கவலை அடைய செய்துள்ளது. நாம் யார் மனதையும் புண்படுத்தவோ, இல்லை அவர்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தவோ கூடாது.

தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் சந்தோஷத்துடனும்,பாதுகாப்புடனும் கொண்டாடுங்கள். தமிழ் மக்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் அஜித் கூறியுள்ளார்.
ப்பில் வெளியாகியுள்ள 'ஆரம்பம்' படத்தை ஏதோ ஒரு திருவிழாவைப் போல அவருடைய ரசிகர்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு திரையரங்குகளிலும் கொண்டாடி வருகிறார்கள். படமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments