22nd of November 2013சென்னை::அஜீத் நடிப்பில் ‘பில்லா’ படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்காத நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மங்காத்தா’ படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.
இந்த படத்தில் முதன்முறையாக தன்னுடைய உண்மையான தோற்றத்தில் நரைத்த முடி, தாடியுடன் நடித்திருந்தார். இந்த தோற்றம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘வீரம்’ ஆகிய படங்களிலும் நரைத்த முடியுடனும், தாடியுடனும் நடித்துள்ளார்.
தன்னுடைய கெட்டப்புக்கு புதுவடிவம் கொடுத்த வெங்கட்பிரபு-வுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தில் அஜீத் நடிக்கப் போகிறாராம். ‘பிரியாணி’ படத்திற்கு பிறகு சிறுபட்ஜெட்டில் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் அஜீத் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
ஏற்கெனவே அஜீத், ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment