9th of November 2013
சென்னை::கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு திடீரென வெளியேறிய அஞ்சலி, சென்னையில் உள்ள பத்திரிகை நிருபர்களை போனில் தொடர்பு கொண்டு பேசி, இயக்குநர் களஞ்சியம், சித்தி பாரதிதேவி ஆகியோர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இருவரும் சேர்ந்து என்னை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு களஞ்சியம்தான் பொறுப்பு என்றும் அஞ்சலி கூறியிருந்தார்.
இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த களஞ்சியம், அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததுடன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத அஞ்சலிக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகை அஞ்சலி தற்போது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஜெகனாப்பேட்டை என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்த பகுதி, ராசுல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டதாகும்.
இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டு நகல் ராசுல் போலீஸ் நிலையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, களஞ்சியத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அஞ்சலி நீதிமன்றத்தில் சரண் அடைய முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக அவர் விரைவில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. (

Comments
Post a Comment