26th of November 2013
சென்னை::மதயானை கூட்டம் படத்தின் வெளியிடும் உரிமையை ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ்குமார் கைப்பற்றியுள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதன் முறையாக தயாரித்துள்ள படம் 'மதயானை கூட்டம்'. புதுமுகம் கதிர் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஓவியா.
பாலுமகேந்திராவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விக்ரம் சுகுமாரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதனிடையே 'மதயானை கூட்டம் படத்தை பார்த்து பிடித்துப்போன ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ்குமார் படத்தின் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார்.
மேலும் அவர் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரை பாராட்டியதோடு தான் தயாரிக்கும் புதிய படத்திற்கு விக்ரம் சுகுமாறனையும் ஹீரோ கதிரையும் ஒப்பந்தம் செய்து, அட்வான்ஸ் தொகையை வழங்கி இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
Comments
Post a Comment