21st of November 2013
சென்னை::இந்த காலத்துல இப்படியும் ஒரு ஹீரோயினா ?-ன்னு ஆச்சரியப்பட வச்சிருக்கிறாரு ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் ஹீரோயின் ஷிவானி…
சென்னை::இந்த காலத்துல இப்படியும் ஒரு ஹீரோயினா ?-ன்னு ஆச்சரியப்பட வச்சிருக்கிறாரு ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் ஹீரோயின் ஷிவானி…
அவங்கவங்க…எங்களை இப்படி காமிச்சிட்டாங்க…அப்படி காமிச்சிட்டாங்கன்னு…புகார் சொல்லிட்டுத் திரியற இந்த நேரத்துல, மேற்படி சொன்ன ‘இன்ப அதிர்ச்சி’ செய்தியைக் கேட்டு நமக்கும் ‘அதிர்ச்சி’தான்….
சரி, ஏன் இவ்ளோ சஸ்பென்ஸ்…மேல படிங்க…கொஞ்ச நீளமா இருந்தாலும்…‘இன்பமான செய்தி’ ஆச்சே…படிக்க மாட்டீங்களா என்ன…
சாய்ந்தாடு சாய்ந்தாடு” படத்தின் இயக்குநர் கஸாலிக்கு அந்த நாயகி கொடுத்த இன்ப அதிர்ச்சியை அவர் வாயாலேயே கேட்போம்.
சாய்ந்தாடு சாய்ந்தாடு’ எனக்கு முதல் படம். இது ஒரு குறுநகரத்தில் நடக்கும் கதை. கதைப்படி ஷீலா என்கிற கேரக்டர் அல்ட்ரா மாடர்னாக சிட்டியில் வளர்ந்த பொண்ணு. சிட்டியில் இருப்பது போலவே அரையும் குறையுமான காஸ்ட்யூமோடு அந்த குறுநகரத்திற்கு வருவாள்.
இந்த ஷீலா கேரக்டரில் நடிக்க வைக்க, மும்பையில் இருந்து ஷிவானி என்ற மாடலை அழைத்து வந்தோம். படப்பிடிப்பு அன்று ஷிவானிக்கு, நடிக்க வேண்டிய கேரக்டர் பற்றி ஆங்கிலத்தின் விளக்கிவிட்டேன். ஆனால் அந்த அரைகுறை ஆடை மேட்டர் பற்றி எப்படி விளக்குவது என்பதில் சின்னதாக எனக்குள் கடமுடா. ஒருவழியாக அதை கன்வே பண்ணிவிட்டேன். முட்டிக்கால் தெரியவேண்டும்… லைட்டா அப்டி இப்டி இருக்கணும்னு சொல்லியாச்சு.
அதைக்கேட்ட ஷிவானி, ஓகே காஸ்ட்யூம் கொண்டு வாங்க பார்ப்போம்னு சொல்லி உடனே கொடுத்த காஸ்ட்யூமை போட்டுட்டு வந்து நின்னாங்க. கூடவே, சார் இந்த காஸ்ட்யூம்ல நீங்க கேட்ட கிளாமர் கொஞ்சம் கூட இல்லயே… எங்கிட்ட வேற காஸ்ட்யூம் இருக்கு போட்டுட்டு வரவான்னு கேட்டாங்க. நானும் கேமராமேன் ஷிவாவும் ஓகேன்னு சொன்னோம்.
அடுத்த அஞ்சாவது நிமிஷம் காஸ்ட்யூம் ஓகேவான்னு பார்க்க மேடம் கூப்பிட்டாங்கன்னு அஸிஸ்டெண்ட் வந்து சொன்னார். ஷிவானி அறைக்கு நானும் கேமராமேனும் போனோம்.
இது ஓகே”வா சார்னு ஆஜரான ஷிவானியைப் பார்த்து, எங்களுக்கு ஷாக். டர்ட்டி கேர்ள் மாதிரி ஒரு காஸ்ட்யூம். கிட்டத்தட்ட டிரெஸ் எங்க இருக்குன்னு டெலஸ்கோப் வச்சி பார்க்கவேண்டிய அளவுக்கு கிளாமரோ கிளாமர்.
இதை “அதிர்ச்சி”ன்னு எடுத்துக்கிறதா, இல்ல “இன்ப அதிர்ச்சி”ன்னு எடுத்துக்கிறதான்னு எங்களுக்கு குழப்பம். ஏன்னா, ஷிவானியோட அந்த தாராள மனசை பயன்படுத்தமுடியாதுங்கிற வருத்தம் தான்.
ஷிவானி கிட்ட, இது வில்லேஜ் சப்ஜெக்ட். எங்க ஊரு இந்த அளவெல்லாம் தாங்காதும்மா. பொறு. உனக்கும் வேண்டாம். எனக்கும் வேண்டாம்னு சொல்லி மூணாவதா ஒரு காஸ்ட்யூம் கொடுத்து நடிக்க வச்சோம்.
இருந்தாலும் காரைக்குடில சூட்டிங் பார்க்க வந்த கூட்டம் அப்பவே ஷிவானிக்கு ரசிகர் மன்றம் வச்சிட்டாங்க.
உன்னோட நல்ல மனசுக்கு நீ தமிழ் சினிமால ரொம்ப நல்லா வருவேம்மான்னு ஷிவானியை வாழ்த்தி அனுப்பி வச்சோம்,” என்றார் இயக்குனர் கஸாலி.
நீங்க மட்டும் இல்ல சார் படம் வந்தா நாங்களும்… அதாவது ரசிகர்களும் ஷிவானியை அப்படியே வாழ்த்துவாங்க.
நல்ல வேளை ரசிகர் மன்றத்தோட நிறுத்தினாங்க….
Comments
Post a Comment