29th of November 2013
சென்னை::களவாணி' ஓவியா, தற்போது நடித்துள்ள, 'மதயானை கூட்டம்' படத்தை,ரொம்பவே எதிர்பார்க்கிறார். இந்த படத்தில் நடித்தது பற்றி, ஓவியா கூறுகையில், 'இந்த படம், மதுரை வட்டார பின்னணியில் உருவாகியுள்ளது. நான் கேரளத்து பெண்ணாக நடித்துள்ளேன்.
ஏற்கனவே நான் கேரளத்து பெண் என்பதால், ரொம்ப இயல்பாக நடித்துள்ளேன். மேலும், முதன் முறையாக இப்படத்தில் எனக்கு நானே டப்பிங்கும் பேசியுள்ளேன். எனது தமிழ், மலையாள வாசனையுடன் தான் இருக்கும். அதனால், மலையாளம் கலந்து பேசினால் தான், இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என்று, என்னையே டப்பிங் பேச வைத்தனர்' என்கிறார், ஓவியா. '
தற்போது கோலிவுட்டில் பின்தங்கியிருக்கும், என் மார்க்கெட்டை
இப்படம் மீண்டும் உயர்த்தும்' என்றும், நம்பிக்கையுடன் கூறுகிறார், ஓவியா.
இப்படம் மீண்டும் உயர்த்தும்' என்றும், நம்பிக்கையுடன் கூறுகிறார், ஓவியா.
Comments
Post a Comment