ஆண்ட்ரியாவை காதலிக்கும் மல்லுவுட் ஹீரோ தமிழில் அறிமுகம்!!!

22nd of November 2013
சென்னை::ஆண்ட்ரியாவை காதலிக்கும் மல்லுவுட் ஹீரோ தமிழில் அறிமுகமாக உள்ளார். அலைபாயுதே படம் மூலம் ஹீரோவாக மாதவன், கடல் படத்தில் ராதா மகள் துளசி ஹீரோயின் என மலையாள ஸ்டார்களை கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்த மணிரத்னம், அடுத்து மற்றொரு மலையாள பட ஹீரோவான பஹத் பாசிலை தமிழில் அறிமுகம் செய்ய உள்ளார்.

இவர் நடித்த படங்கள் மாதத்துக்கு ஒன்று வீதம் மல்லுவுட்டில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் மணிரத்னம் மூலம் அறிமுகமாவதாக தகவல் வெளியானதையடுத்து அவர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காற்று என்ற பெயரில் புதிய படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்திருப்பதாகவும் அப்படத்தில்தான் பஹத் பாசில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

பஹத் பாசில், நடிகை ஆண்ட்ரியாவை காதலிப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். ஆனால், பஹத்தை காதலிக்கவில்லை என்று ஆண்ட்ரியா கூறிய போதும் தான் இன்னும் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பஹத் சமீபத்தில் மீண்டும் தனது காதலை உறுதி செய்து பரபரப்பாக பேட்டி அளித்தார்.

இவர்கள் இருவரும் மலையாளத்தில் அன்னையும் ரசூலும் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த காதல் பிரச்னையை அடுத்து மற்றொரு படத்தில் பஹத்துடன் நடிக்க வாய்ப்பு வந்த போது அதை ஆண்ட்ரியா நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments