நயன்தாரா படத்தை விரும்பும் பிரபுதேவா!!!

19th of November 2013
சென்னை::ஆரம்பம் படத்தை ரீமேக் செய்ய ஹிந்தி நடிகர்களுக்குள் போட்டி. அதில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறார் பிரபுதேவா.
 
அஜித், நயன்தாரா, ஆர்யா நடித்திருக்கும் ஆரம்பம் படம் அஜ்மல் கசாப் மற்றும் தீவிரவாதிகள் நடத்திய மும்பை தாக்குதலில் மரணமடைந்த போலீஸ் அதிகாரியின் கதையுடன் தொடர்புடையது. அதுதான் ஆரம்பத்தின் இன்ஸ்பிரேஷன்.
 
ஹிந்தியில் கொஞ்சம் தேசபக்தி மிளாகபொடியை தூவி எடுத்தால் இரு நூறு கோடி வசூல் செய்யும் படம் கியாரணடி...
 
ஹிந்தி ரீமேக் கிங்கான பிரபுதேவாவுக்கு ஆரம்பத்தின் மீது சபலம் தட்டாமலிருந்தால்தான் ஆச்சரியம். ஆரம்பத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் ஆசையை வெளியிட்டிருக்கிறார்.
 
ஷாகித் கபூரை வைத்து இயக்கிய ரா...ராஜ்குமார் வெளியாகாத நிலையில் அஜய் தேவ்கானை வைத்து ஆக்ஷன் ஜாக்ஸனை தொடங்கியிருக்கிறார்.
விட்டால் நாலு வாரத்துக்கு ஒரு படம் இயக்குவார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments