15th of November 2013
சென்னை::இந்தி படத்தில் நடித்தாக வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது என்கிறார் அனுஷ்கா. அசின், காஜல் அகர்வால், இலியானா என தென்னிந்திய நடிகைகள் இந்தியில் போட்டிபோட்டு நடிக்கின்றனர். மற்ற ஹீரோயின்களும் இந்தி பட வாய்ப்புக்காக தவியாய் தவிக்கிறார்கள். ஆனால், அனுஷ்காவுக்கு இந்தி பட மோகம் கொஞ்சமும் இல்லை.
செல்வராகவன் இயக்கத்தில் ‘இரண்டாம்உலகம்’ படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அனுஷ்கா கலந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, ‘இப்படத்தின் ஸ்கிரிப்டை செல்வராகவன் சொன்னபோது வித்தியாசமான கதையாக தெரிந்தது. உடனே கால்ஷீட் கொடுத்தேன். சுமார் 2 வருடம் இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்றால் அதில் எனது ஈடுபாடு எப்படி இருந்தது என்பதை புரிந்துகொள்ளலாம்.

தற்போது குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரம்மா தேவி’, ராஜ்மவுலி இயக்கத்தில் ‘பாஹுபாலி‘ என இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். எல்லோரும் என்னிடம் ‘இந்தியில் நடிக்காதது ஏன்’ என்று கேட்கிறார்கள். தற்போது 2015ம் ஆண்டு வரை என்னிடம் கால்ஷீட் கிடையாது. இந்தியில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் தமிழ், தெலுங்கில் பிசியாக இருந்ததால் ஏற்கவில்லை. இந்தியில் நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். அதற்கு கால்ஷீட் பொருத்தமாக அமைய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இந்தி படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் எனக்கில்லை‘ என்றார்.
Comments
Post a Comment