உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு இன்று பிறந்த நாள்!!!

7th of November 2013
சென்னை::உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
 
தனது 4-வது வயதில், ‘களத்தூர் கண்
ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் ஹாசன் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் நடித்திருக்கிறார்.
 
அதுமட்டுமின்றி மக்கள் திலகம், நடிகர் திலகம் ஆகியோருடன் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான கமல் ஹாசன் இன்று தனது 59வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு திரை உலக பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இன்று கமல் தவிர இயக்குனர் வெங்கட் பிரபுவும், நடிகை அனுஷ்காவும் தங்கள் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments