29th of November 2013
சென்னை::'கற்றது தமிழ்' பட இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான 'தங்க மீன்கள்' திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
44வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகள், மொழிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன. இதில்,'தங்கமீன்கள்' படம் ஆங்கில சப் டைட்டிலுடன் நேற்று திரையிடப்பட்டது.
படம் திரையிடுவதற்கு முன்பாக இயக்குநர் ராம், படத்தில் நடித்திருந்த பத்மப்ரியா, ஷெல்லி, படத்தை வெளியிட்ட ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் ஆகியோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் பேசிய இயக்குநர் ராம், "மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை. தங்கமீன்கள் படம் எனக்கு இங்கு தமிழில் பேசும் ஒரு வாய்ப்பினை தந்திருக்கிறது. ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது." என்றார்.
இந்திய பனோரமா பிரிவில் திரையிட தேர்வாகியுள்ள ஒரே தமிழ்ப் படமான தங்க மீன்கள் மீண்டும் வரும் 29ஆம் தேதியும் திரையிடப்படுகிறது.

Comments
Post a Comment