காதல் சர்ச்சை: சிம்புவுடன் ஜோடி சேர தயக்கம் காட்டும் நடிகைகள்!!!

14th of November 2013
சென்னை::நடிகர் சிம்புவும் ,ஹன்சிகா மொத்வானியும் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தனர். உடனடியாகத் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது ஐந்து வருடங்கள் சென்ற பின்னரே திருமணம் என்று ஹன்சிகா அறிவித்தார். சிம்புவோ திருமணத்திற்கு அவசரப்படுத்துவதாகக் கூறப்பட்டது. இதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில்,வி.டி.வி கணேஷின் 'இங்க என்ன சொல்லுது' படத்தில் சிம்புவும், ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருப்பதுபோல் காட்சிகள் வெளிவந்தன.இது அவர்களின் மோதலை மேலும் அதிகரித்துள்ளது.

இதுமட்டுமின்றி இந்த வதந்தியால் மற்ற நடிகைகளும் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதில் தயக்கம் காட்டுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் சிம்பு டைரக்டர் பாண்டிராஜின்

ஆயினும், இன்னும் இந்த இரண்டு படங்களின் கதாநாயகித் தேர்வு முடிவடையவில்லை. இயக்குனர் பாண்டிராஜின் திரைப்படத்திற்கான முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. கதாநாயகி தேர்வு செய்யப்பட்டாமலே அடுத்தகட்டப் படப்பிடிப்பை அவர் தொடங்கமுடியும் என்ற நிலை உள்ளது.

தென்னிந்திய நடிகைகள் சிம்புவுடன் ஜோடி சேரத் தயங்கிக் கொண்டிருக்கும்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மும்பை பெண் ஒருவரை தேர்வு செய்திருக்கிறாராம். 
பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இயக்குனர் கவுதம் மேனனின் அடுத்த படத்திலும் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments