நிருபர்களுக்கு நயன்தாரா போட்ட தடா!!!கேர­ளத்து பெண்­குட்­டி­யான நயன்­தாரா, பெரிய அசைவ பிரி­யையாம்!!!

8th of November 2013
சென்னை::சிம்புவை நயன்தாரா தீவிரமாக காதலித்து வந்தபோது, அந்த செய்தி மீடியாக்களிலும் காட்டுத்தீயாய் பரவியது. முதலில் அதை மறுத்த அவர்கள் பின்னர் வெளிப்படையாகவே ஜோடியாக சுற்றித்திரிந்தனர். ஆனால் குறுகிய காலத்திலேயே அவர்களுக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு காதல் முறிந்து போனது. அதையடுத்து பிரபுதேவா மீது காதல் அம்பு தொடுத்தார் நயன்.

இந்த முறை திருமண பந்தத்தில் அவர்கள் இணைகிற சூழ்நிலைகூட உருவானது. அதற்காக தனது மனைவியைக்கூட விவாகரத்து செய்தார் பிரபுதேவா. அதேபோல் நயனும் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவுக்கு மாறினார். ஆனால், இதையடுத்து அவர்களுக்கிடையே என்ன நடந்ததோ, கடைசி நேரத்தில் அவர்களது காதல் பாலமும் டமார் என்று வெடித்து சிதறியது.

இப்படி இரண்டு முறையும் காதலில் தோற்றுப்போன நயன்தாரா, அவ்வப்போது மீடியாக்கள் அந்த செய்தியை வெளியிட்டதால், தனது சொந்த வாழ்க்கையில் மீடியாக்கள் ரொம்பவே விளையாடி விட்டன என்று யார் மீதோ உள்ள கோபத்தை மீடியாக்கள் மீது காட்டி வருகிறார்.

அதன் எதிரொலியாக, தற்போது தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு தளங்களுக்கு எந்த நிருபர்களையும் வரவிடாதீர்கள் என்று இயக்குனர்களை கேட்டுக்கொள்கிறார் நயன்தாரா. மேலும், நிருபர்கள் கூடியிருக்கும் பிரஸ்மீட்டிலும் அவர் கலந்து கொள்வதில்லை.

இப்படி நிருபர்களை நயன்தாரா வெறுத்தாலும், தற்போது 'இது கதிர்வேலன் காதல்' என்ற படத்தில் நிருபராகவே நடித்து வருகிறார். அதேபோல், தெலுங்கில் அவர் நடித்த ஆஞ்சநேயலு என்ற படமும் ரிப்போர்ட்டர் என்ற பெயரிலேயே தமிழுக்கு டப்பாகி ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
 
கேர­ளத்து பெண்­குட்­டி­யான நயன்­தாரா, பெரிய அசைவ பிரி­யையாம்!
 
கேர­ளத்து பெண்­குட்­டி­யான நயன்­தாரா, பெரிய அசைவ பிரி­யையாம். குறிப்­பாக, தனக்கு விருப்­ப­மான உண­வான, சிக்கன் என்றால் ஒரு பிடி அதி­க­மா­கவே சாப்­பி­டு­வாராம். ஆனால், இப்­போது அந்த அசைவ உணவே, நயன்­தா­ரா­வுக்கு எதி­ரி­யாகி விட்­டதாம். அதா­வது, அசைவம் எடுத்துக் கொண்­டாலே, அவ­ரது தோலில் அலர்ஜி பிரச்னை ஏற்­ப­டு­கி­றதாம். இரண்­டா­வது ரவுண்டில், பிசி­யாக நடித்துக் கொண்­டி­ருக்கும் நயன்­தாரா, இந்த திடீர் அலர்­ஜி­யினால், அதிர்ச்சி அடைந்­துள்­ளாராம். இதே­போன்று, தோல் அலர்ஜி நோயினால் சமந்தா சிகிச்சை எடுத்­தது போன்று, தனக்கும் சூழ்­நிலை உரு­வா­கி­வி­டக்­ கூ­டாது என்­ப­தற்­காக, தனது தாய் வீடான கேரளா சென்று, ஆயுர்­வேத சிகிச்சை எடுத்து வரு­கி­றாராம் நயன்­தாரா.
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments