11th of November 2013
சென்னை:: ஜப்பானில் பாடல் காட்சிகளை முடித்துக்கொண்டு 'ஜில்லா' படக்குழு சென்னை திரும்பியது.
ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் படம்தான் ஜில்லா. துப்பாக்கி படத்தின் வெற்றியையடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், இத்தனை நாட்களாக படங்களில் இருந்து தள்ளி இருந்த பூர்ணிமா பாக்யராஜும் நடிக்கின்றனர்.
இதில் மோகன்லால் தாதாவாக நடிக்கிறார், அவரது மகனாக வரும் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஒரு தாதாவின் மகன் எப்படி போலீஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதையாம். படத்தின் முதல்பாதி காதல், காமெடி என்று கலகலவென இருக்க இரண்டாம் பாதி ஆக்ஷன் நிறைந்ததாகவும், பல திருப்பங்களைக் கொண்டதாகவும் இருக்குமாம்.
தீபாவளியன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே படக்குழு 2 பாடல் காட்சிகளை படமாக்க ஜப்பான் நாட்டுக்குச் சென்றது. விஜய்யுடன் காஜலும் படக்குழுவினரும் சென்றிருந்தனர். இந்நிலையில் பாடல் காட்சிகளை வெற்றிகரமாக படமாக்கிவிட்ட படக்குழு, மீண்டும் சென்னை திரும்பியுள்ளது.
அடுத்த கட்டமாக படத்தின் டீஸரை வெளியிடும் பணியில் பட யூனிட் ஈடுபட்டுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது.
Comments
Post a Comment