6th of November 2013
சென்னை::விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பவர் பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே.
1987ம் ஆண்டு வெளிவந்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம் பெற்ற ‘செண்பகமே…செண்பகமே…’ என்ற சூப்பர் ஹிட் பாடலுடன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து, ‘மீரா’ படத்தில் ‘ஓ…பட்டர்பிளை…’, ‘புதுப்பாட்டு’ படத்தில் ‘எங்க ஊரு காதலை…’, ‘நேருக்கு நேர்’ படத்தில் ‘எங்கெங்கே…’, ‘இருவர்’ படத்தில் ‘வெண்ணிலா…’, ‘ஹே ராம்’ படத்தில் ‘ நீ பார்த்த…’ ‘அலை பாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்…’, ‘சந்திரமுகி’ படத்தில் ‘கொஞ்ச நேரம்…’ போன்ற பல ஹிட் பாடல்களை தமிழில் பாடியுள்ளார்.
நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளையராஜாவைப் பற்றி பேசும் போது, “ செண்பகமே…’ பாடலைப் பாடும் போது எனக்கு நடுக்கமாக இருந்தது. ஏனென்றால், தமிழில் ‘மகான்’, மிகப் பெரிய இசையமைப்பாளர் இளையராஜா என்னை பாட அழைத்திருந்தார்,” என்று சொல்லி அந்த பாடலையும் பார்க்காமலே ஒரு சில வரிகளைப் பாடிக் காட்டினார்.
அழகான குரலில் தமிழ் இன்னும் அழகாகவே ஒலிக்கிறது…
Comments
Post a Comment