8th of November 2013
சென்னை::வீரம் படத்திற்கு பிறகு அஜீத் நடிக்கப் போவது ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில்தான் என்பது முழுக்க முழுக்க உறுதியாகி விட்டது. இந்த படத்தை இயக்கப் போவது கவுதம் மேனன்தான் என்பதும் உறுதியாகி இருக்கிறது. இந்த தகவலை அதிகாரபூர்வமாக அஜீத்தின் மேனேஜரே மீடியாக்களுக்கு அறிவித்திருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆரம்பம் படத்தின் கலெக்ஷனும் ரிசல்ட்டும் இருப்பதால், ஏக குஷியாக இருக்கிறது ஏ.எம்.ரத்னம் வட்டாரம். இதற்கிடையில் இன்னொரு சூடான செய்தியும் உலா வருகிறது.
ராஜா ராணி படத்தின் இயக்குனர் அட்லீ அஜீத்திடம் ஒரு கதையை சொன்னாராம். இது மிகவும் பிடித்திருப்பதாக கூறிய அஜீத், கதையை இன்னும் நன்றாக வடிவமைக்க சொல்லி அறிவுறுத்தியிருக்கிறாராம். முழு வடிவமும் அவருக்கு பிடித்திருந்தால் அட்லீதான் அஜீத்தின் அடுத்த பட இயக்குனர் என்று கூறிவிடலாம். தனக்கொரு தயாரிப்பாளர் பிடித்துவிட்டால் அவரது கம்பெனிக்கே தொடர்ந்து கால்ஷீட் தருகிற வழக்கம் அஜீத்துக்கு இருப்பதால், இந்த படத்தையும் லபக்கென கைப்பற்றிக் கொள்வாரோ ரத்னம்?
Comments
Post a Comment