பழைய காமெடி நடிகர் நாகேஷ் பேரன் கதாநாயகன் ஆனார்!!!

21st of November 2013
சென்னை::மறைந்த பழைய காமெடி நடிகர் நாகேஷ் பேரன் கஜேஷ் ஆனந்த் கதாநாயகன் ஆனார். ஏ.எம்.நந்தகுமார் இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

கஜேஷ் ஆனந்த் ஓட்டல் நிர்வாகம் பற்றி படித்துள்ளார். இவர் நாகேஷ் மகனும் நடிகருமான ஆனந்த் பாபுவின் மகன் ஆவார். கதாநாயகனானது குறித்து கஜேஷ் ஆனந்த் சொல்கிறார்.

எனக்கு 18 வயது இருக்கும் போது தாத்தா நாகேஷ் மறைந்து விட்டார். என் தந்தை ஆனந்த் பாபு நடிகராக இருந்தும்கூட படப்பிடிப்பு நடந்த பகுதிகளுக்கு நான் போனது இல்லை. சினிமாவை விட்டு விலகியே இருந்தேன். இப்போது நானும் நடிக்க வந்து விட்டேன்.

ஓட்டல் நிர்வாகம் படித்து விட்டு சிங்கப்பூர் செல்ல இருந்தேன். அப்போது தான் சினிமா வாய்ப்பு வந்தது. என் தாத்தா நாகேஷ் சுமார் 1200 படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வளர அவரது ஆசீர்வாதம் எனக்கு இருக்கும் என்றார்.

கஜேஷ் ஆனந்த் நடிப்பு மற்றும் நடன பயிற்சிகள் எடுத்து வருகிறார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments