எனக்கு பணம்தான் முக்கியம் நஸ்ரியா அதிரடி பதில்!!!

22nd of November 2013சென்னை::பணம் முக்கியம்தான் அதேசமயம் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்றார் நஸ்ரியா நாசிம்.‘நேரம்‘, ‘நய்யாண்டி‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். ஜெய்யுடன் காதல், நய்யாண்டி பட இயக்குனர் சற்குணத்துடன் மோதல் என்று அடிக்கடி பிரச்னைகளில் சிக்கி வருகிறார்.
 
நய்யாண்டி‘ பட பிரச்னைக்கு பிறகு ஆபாசமாக நடிக்க மாட்டேன், முத்தம் தர மாட்டேன் என்று கடுமையான நிபந்தனை விதிப்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய ஹீரோக்கள் பயப்படுகின்றனர் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்நிலையில் ஜீவா நடிக்கும் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
 
இதுபற்றி நஸ்ரியா நாசிம் கூறும்போது,‘ஜீவா படத்திலிருந்து என்னை நீக்கிவிட்டார்களா என்று கேட்கின்றனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் படத்தில் நான் ஹீரோயினாக நடிக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
சினிமா துறையில் பணம் முக்கியம்தான். அதைவிட நம்பிக்கையும் முக்கியம். நய்யாண்டி இயக்குனர் சற்குணமும் அவரது குழுவினரும் என்னை ஏமாற்றி விட்டார்கள்‘ என்றார். -
                    tamil matrimony_HOME_468x60.gif

Comments