டபுள் ஹீரோயினி கதை என்றாலே உஷாராகும் ஓவியா!!!

2nd of November 2013
சென்னை::களவாணி படம் மூலம் பிரபலமான ஓவியா, ஜில்லென்று ஒரு சந்திப்பு படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.அப்படத்தில் நடித்த இன்னொரு ஹீரோயினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கினார். அதனால் அதையடுத்து இனிமேல் இரண்டு ஹீரோயினி கதைகளில் நடிக்க மாட்டேன் என்றும் அப்போது காரசாரமாக பேட்டிகள் கொடுத்தார்.

அந்த முடிவுக்கான காரணத்தை கேட்டவர்களிடம், படத்தின் கதை சொல்லும்போது இரண்டு ஹீரோயினிக்கும் சரிசமமான வேடங்கள்தான் சொன்னார்கள். ஆனால், பிறகு பார்த்தால் எனது கேரக்டரின் பல காட்சிகளில் கத்தரி வைத்து அந்த நடிகைக்கு முககியத்துவம் கொடுத்து விட்டனர். அந்த அளவுக்கு முக்கியமானவர்களை தன் பக்கம் இழுத்து விட்டார் என்று கூறினார் ஓவியா.

பின்னர் மூடர்கூடம் என்ற படத்தில் நடித்த ஓவியா, இப்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கும் மதயானைக்கூட்டம் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, கிருஷ்ணா நடிக்கும் இருக்கு ஆனா இல்ல என்ற படத்திலும் இரண்டு கதாநாயகி கதையில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் ஓவியா.

இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டு ஹீரோயினி கதை என்றாலே எனக்கு அலர்ஜிதான். ஆனால், எல்லாருமே தப்பானவர்கள் இல்லையே. கதை சொன்னபடி அப்படியே படமாக்கும் டைரக்டர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் இந்த படத்தில் நடிக்கிறேன். அதேசமயம், முன்பு மாதிரி பிரச்னை வரக்கூடாது என்பதற்காக கதை கேட்கும்போது, பின்னர் எககாரணம் கொண்டும் என் கேரக்டரில் கத்தரி வைக்கக்கூடாது என்றும் உறுதி படுத்திக்கொண்டுள்ளேன் என்று சொல்லும் ஓவியா, கலகலப்பு படத்தில் எனக்கும், அஞ்சலிக்கும் கொடுத்தது போல் இப்படத்திலும் இரண்டு நாயகிகளுக்கும் சரிசமமான கேரக்டர் என்கிறார்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments