11th of November 2013
சென்னை::விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க நேசன் இயக்கத்தில் இமான் இசையமைத்து வரும் படம் ‘ஜில்லா’.
இப்படத்திற்காக விஜய்க்காக இமான் ஒரு காதல் மெலடி பாடலை பாடியிருக்கிறார்.
புதிய பெண் பாடலாசிரியர் பார்வதி இந்த பாடலை எழுதியுள்ளார்.
விஜய் நடித்த ‘தமிழன்’ படத்திற்குப் பிறகு, விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு இமான் இப்போதுதான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த படத்தில் இமான், பாடகி அனுராதா ஸ்ரீராமுன் இணைந்து ‘மாட்டு மாட்டுனு…’ என்ற ஹிட்டான பாடலைப் பாடியிருந்தார்.
ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழித்து அண்ணன் விஜய்க்காக பின்னணி பாடியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, ” என இமான் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment