26th of November 2013
சென்னை::2009-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த படங்களையும் இயக்காத பால்கி தற்போது இந்தியில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து தனுஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக இதில் நடிப்பவர் அக்ஷரா ஹாஸன். அதவாது, ஸ்ருதி ஹாசனின் தங்கை. ஆரம்பத்தில் அக்ஷரா ஹாசன், தனது திரை பயணத்தை உதவி இயக்குனாராகதான் துவங்கினார். பர்ஸானியா மற்றும் சொசைட்டி ஆகிய படங்களில் தோலாக்கியாவிடம் துணை இயக்குனராக பணியாற்றினார்.
அதனால் அவர் இயக்குனராகப் போகிறார் என்றுதான் கமல் மற்றும் சரிகா நினைத்தார்களாம்.
இந்நிலையில் அக்ஷரா ஹாசன் யாரும் எதிர்பார்ககாத வகையில் திடீரென நடிக்க வந்துவிட்டார். இதற்கு முன்பே அக்ஷராவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்த அவர் கேமராவுக்கு பின்னால் இருக்க விரும்புவதாக தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது அவருடைய இந்த மனமாற்றம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அக்ஷராவை தனுஷுக்கு ஜோடியாக்கியதன் பின்னணியில் ஸ்ருதி ஹாஸன் இருப்பதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பால்கி படத்தில் முதலில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருந்தவர் ஸ்ருதிஹாஸன்தானாம்.
ஆனால் ஏற்கெனவே இருவர் பற்றியும் பலவிதமான கிசுகிசுக்கள் வந்ததால், அக்ஷராவை ஜோடியாக்குமாறு சிபாரிசு செய்ததே ஸ்ருதி ஹாஸன்தானாம். எது எப்படியோ, ஸ்ருதியை போன்று அவருடைய தங்கை அக்ஷராவும் தனுஷுடனே அறிமுகமாகிறார்.
Comments
Post a Comment