6th of November 2013
சென்னை::சிவகார்த்திகேயனின் முழு கவனமும் இப்போது மான் கராத்தே படத்தில்தான். தனது தொடர் ஹிட்டுகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இன்னொரு சென்ட்டிமென்ட் இருக்கிறது அவருக்கு. இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் அவரால் ஆடி கார் வாங்க முடிந்திருக்கிறது. யெஸ்... புதிதாக ஆடி கார் வாங்கியிருக்கிறார் அவர்.
இந்த படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் ஹன்சிகாவுக்கும் மான் கராத்தே படத்தின் மூலம் ஒரு மாற்றம். ஏற்கனவே உடல் எடையை குறைத்திருந்த அவர், இந்த படத்தில் மேலும் மேலும் இளைத்திருக்கிறாராம். சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்வதால் உடல்வாகு அவருக்கு ஏற்ப இருக்கலாம் என்று டைரக்டர் அறிவுறுத்தியதின் விளைவு என்கிறார்கள். சே... சே... அப்படியெல்லாமா இருக்கும்? தமிழ், தெலுங்கு என ஏழெட்டு படங்களில் பிசியாக இருக்கும் அவர், இந்த ஒரு படத்திற்காகவா அதையெல்லாம் செய்வார்? இது ஒட்டுமொத்த தேவையாக இருந்திருக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறார்கள். ஆடி கார். கைக்கு அடக்கமான ஹன்சிகா. கொடுத்து வைத்தவர்தான் சிவகார்த்திகேயன்.
Comments
Post a Comment